Sunday, 7 April 2013

Nenju poRukkuthillaiyae...!(நெஞ்சு பொறுக்குதிலையே)


நெஞ்சு பொறுக்குதிலையே  - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்,
அஞ்சி அஞ்சி சாவார் - இவர்
அஞ்சாத பொருளி ல் லை  அவனியிலே ;

Nenju poRukkuthilaiye - indha
       Nilai ketta manitharai Ninaindhu vittaal,
Anji anji saavaar - ivar
       Anjaadha poruLillai avaniyilae;

[My heart is unable to tolerate the thought of these unstable people,
Who are scared to death for every single thing on this earth;]

வஞ்சனை பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்த குளத்தில் என்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர் படுவார்; எண்ணி பயப்படுவார்.

Vanjanai paeiygaL enbaar - indha
       Marathil enbaar; andha kuLathil enbaar;
Thunjudhu mugattil enbaar - miga
       Thuyar paduvaar; eNNi bayappaduvaar.

["There are phantoms residing on trees and in lakes;
And a ghost is sleeping on the roof of our house" - 
they say with fear and torment themselves.]

மந்திரவாதி என்பார் - சொன்ன
மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்;
யந்திர சூனியங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!

Mandhiravaadhi enbaar - sonna
       Maathiraththilae manakkili pidippaar;
Yandhira sooniyangaL - innum
       Eththanai aayiram ivar thuyargaL!

[A word about evil wizards will fill their hearts with fear;
Along with black magic and witch crafts add up to their miseries!]

தந்த பொருளை கொண் டே  - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசியலை - இவர்
அஞ்சு தரு பேய் யென்று  எண்ணி நெஞ்சம் அயர்வார்.

Thandha poruLai koNdae - janam
       Thaanguvar ulagathil arasarellaam;
Andha arasiyalai - ivar
       Anju tharu paeiyyendru eNNi Nenjam ayarvaar.

[They praise their rulers for the compliments given by them;
As they're scared to reveal the cunning politics behind it.]

சிப்பாயை கண்டு அஞ்சுவார் - ஊர்
சேவகன் வருதல் கண்டு மனம் பதை ப்பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;

Sippaaiyai kaNdu anjuvaar - oor
       Saevagan varudhal kaNdu manam padhaippaar;
Thuppaakki koNdu oruvan - vegu
       Thoorathil varakkaNdu veettiloLippaar;

[They're afraid at the sight of even a single soldier;
On seeing a man with gun at a distance, 
they run and hide inside their houses;]

அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையை கண்டு பயந் தெழுந்து  நிற்பார்;
எப் போதும்  கை கட்டுவார் - இவர் 
யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்.

Appaal evanO selvaan - avan
       Aadaiyai kaNdu bayandhezhundhu NiRpaar;
EppOdhum kai kattuvaar - ivar
       Yaaridaththum poonaigaL pOl aengi Nadappaar.

[Later on seeing a passer-by they stand up with fear than respect;
Their hands are always folded and their minds always timid.]

நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ?

Nenju poRukkuthilaiyae - indha
       Nilai ketta manidharai Ninaindhu vittaal,
KonjamO pirivinaigaL? - oru
       KOdi endraal adhu peridhaamO?

[My heart is unable to tolerate the thought of these unstable people,
Who have a number of disagreements among themselves]

ஐந்து தலை பாம்பென்பான் - அப்பன்
ஆறு தலை என்று மகன் சொல்லி விட்டால்,
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடு நாள் இருவரும் பகைத்திருப்பார்.

Aindhu thalai paambenbaan - appan
       AaRu thalai endru magan solli vittaal,
Nenju pirindhiduvaar - pinbu
       Nedu naaL iruvarum pagaiththiruppaar.

[When the father explains about a five-headed snake,
If the son objects saying that it has six heads - 
it disrupts their unity endlessly.]

சாத்திரங்கள் ஒன்று காணார் - பொய்
சாத்திர பேய்கள் சொல்லும் வார்த் தை  நம்பியே
கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும் - ஒரு
கொள் கையில்  பிரிந்தவனை குலைத்திகழ்வார்;

SaaththirangaL ondru kaaNaar - poi
       Saaththira paeiyygaL sollum vaarthai Nambiyae
KOththiram ondraai irundhaalum - oru
       KoLgaiyil pirindhavanai kulaiththigazhvaar;

[As they are unaware of the actual scriptures, 
They believe in everything the fake priests say
and show hostility to people of their own tribe;]

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமை
சூது செய்யும் நீசர்களை பணிந்திடுவார்
ஆத்திரம் கொண் டே  இவன் சைவன்  - இவன்
அரிபக்தன் என்று பெரும் சண் டையிடுவார் .

ThOththirangaL solli avarthaam - thamai
       Soodhu seiyyum NeesargaLai paNindhiduvaar
Aathiram koNdae ivan saivan - ivan
       Aribakthan endru perum saNdai iduvaar.

[They subdue themselves to those who chant prayers and fool them
And show their anger on those who pray to a different God.]

நெஞ்சு பொறுக்குதிலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே;
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்
காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார் 

Nenju poRukkuthilaiyae - idhai
       Ninaindhu Ninaindhidinum VeRukkuthilaiyae;
Kanji kudippadhaRkilaar - adhan
       KaaraNangaL ivai ennum aRivum ilaar

[My heart is unable to tolerate and yet it's unable to hate that thought;
They can't get their food for living but still couldn't grasp the reason behind it]

பஞ்சமோ பஞ்சமென்றே - நித்தம்
பரிதவித் தே  உயிர் துடி துடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர்
துயர்களை தீர்க்கவோர் வழியிலையே.

PanjamO panjam endrae - Nitham
       Paridhavithae uyir thudi thudiththu
Thunji madigindraarae - ivar
       ThuyargaLai theerkkavOr vazhiyilaiyae.

[They think that there's no end to their starvation and suffer to death -
Isn't there a way to help these pitiable people?]

எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்;
கண்ணிலா குழந் தைகள்  போல் - பிறர்
காட்டிய வழியில் சென்று மாட்டிக் கொள்வார் ; 

ENNilaa NOyudaiyaar - ivar
       Ezhundhu NadappadhaRku valimaiyilaar;
KaNNilaa kuzhandhaigaL pOl - piRar
       Kaattiya vazhiyil sendru maattikkoLvaar;

[They have uncountable diseases - hence they don't have the strength to stand or walk;
Like a blind man they follow any path guided to them and fall into traps;]

நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரம் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.

NaNNiya perungalaigaL - paththu
       Naalaayiram kOdi Nayandhu Nindra
PuNNiya Naattinilae - ivar
       PoRiyatra vilangugaL pOla vaazhvaar.

[In a nation that's wealthy in various arts and skills - 
They live like an animal without a home.]

Saturday, 6 April 2013

Sudhandhira Thaagam (சுதந்திர தாகம்)


என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
Endru thaNiyum indha sudhandhira thaagam?
          Endru madiyum engaL adimaiyin mOgam?

[When will this thirst for freedom get quenched?
When will the obsession on slavery get abolished?]

என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்?
என்றெமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
Endremadhu annai kai vilangugaL pOgum?
          Endremadhu innalgaL theerndhu poiyyaagum?

[When will my Mother-land's hands get freed from shackles?
When will my grievances get drained completely?]

அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே?
ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே?
Androru Bhaaratham aakka vandhOnae?
          Aariyar vaazhvinai aadharipOnae?

[You came that day to build the nation of Bharat
And favored the lives of the Aryans]

வெற்றி தரும் துணை நின்னருள் அன்றோ?
மெய்யடியோம் இன்னும் வாடுதல் நன்றோ?
Vetri tharum thuNai NinnaruL andrO?
          MeiyyadiyOm innum vaadudhal NandrO?

[It is your grace and nothing else that leads us to victory?
Do you feel good when your true descendants still suffer?]


பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
Panjamum NOyum Nin meiyyadiyaarkkO?
         Paarinil maenmaigaL vaeRini yaarkkO?

[Why have you bestowed us with starvation and diseases?
To whom are you going to grant all the highly rewards?]

தஞ்சம் அடைந்த பின் கை விடலாமா?
தாயும் தன் குழந்தையை தள்ளிடப்போமோ?
Thanjam adaindha pin kai vidalaamO?
         Thaayum than kuzhandhaiyai thaLLidappOmO?

[When we have come to you for shelter, can you abandon us?
Will a mother abandon her own baby?]

அஞ்சலென்றருள் செயும் கடமை இல்லையோ?
ஆரிய! நீயும் நின் அறம் மறந்தாயோ?
AnjalendraruL seiyum kadamai illaayO?
          Aariya! Neeyum Nin aRam maRandhaayO?

[Isn't it your duty to protect us from all our fears?
Arya! Have you forgotten your morale?]

வெஞ்செயல் அரக்கரை வீட்டிடுவோனே!
வீர சிகாமணி! ஆரியர் கோனே!
Vencheyal arakkarai veettiduvOnae!
          veera sigaamaNi! Aariyar kOnae!

[You are the one who kills the evil Rakshasas!
Our courageous gem! The king of Aryans!]


Bhaaratha Samudhaayam (பாரத சமுதாயம்)



பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க !
பாரத சமுதாயம் வாழ்கவே ! - ஜெய ஜெய ஜெய !
Bhaaratha samudhaayam vaazhgavae! - vaazhga vaazhga!
Bhaaratha samudhaayam vaazhgavae! - jaya jaya jaya!

[Long Live the province of Bharat - Long Live!]

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை  - வாழ்க !
Muppadhu kOdi janangaLin sangam
Muzhumaikkum podhu udaimai
Oppillaadha samudhaayam
Ulagaththukkoru pudhumai - vaazhga!

[A common possession to the thirty crore citizens,
This unparalleled society is a novelty to the world!]

மனிதர் உணர்வை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனி உண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனி உண்டோ? -
Manidhar uNarvai manidhar paRikkum
                vazhakkam ini uNdO?
Manidhar NOga manidhar paarkkum
                vaazhkkai ini uNdO? - 

[Henceforth, will we let a human seize another human's emotions?
Will there be a silent spectator of other humans' agonies?]

புலனில் வாழ்க்கை இனி உண்டோ? நம்மில்லந்த
வாழ்க்கை இனி உண்டோ?
Pulanil vaazhkkai ini uNdO? Nammillandha
                vaazhkkai ini uNdO?

[Will we have the nerve in us to live such a life anymore?]

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெரு நாடு;
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றி தரு நாடு - 
Iniya pozhilgaL Nediya vayalgaL
                eNNarum peru Naadu;
Kaniyum kizhangum thaaniyangaLum
                kaNakkindri tharu Naadu - 

[This nation has many sight-worthy green-lands and  enormous farms;
From which it yields us countless fruits, vegetables and grains - ]

இது கணக்கின்றி தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றி தரு நாடு - வாழ்க!
Idhu kaNakkindri tharu Naadu - Niththa Niththam
                kaNakkindri tharu Naadu - vaazhga!

[This land gives us a surplus of everything, unaccounted,
And it continues to give us everyday!]

இனி ஒரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்;
தனி ஒருவனுக்குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம் - வாழ்க !
Ini oru vidhi seiyvOm - adhai
               endha NaaLum kaappOm;
Thani oruvanukkuNavilai enil
              jagaththinai azhiththiduvOm - vaazhga!

[Let us make a rule today and follow it forever;
It's just right to destroy the whole earth
in order to feed a single human!]

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்,
Ellaarum Or kulam ellaarum Or inam
             ellaarum Indhiya makkaL,

[Everyone here belongs to the same clan and caste
All are Indian nationals,]

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!
Ellaarum Or NiRai ellaarum Or vilai
             ellaarum iNNaattu mannar - Naam
             ellaarum iNNaattu mannar - Aam
             ellaarum iNNaattu mannar - vaazhga!

[Everyone here is regarded with the same value and significance
All of us are rulers of this nation - 
Yes, you heard it right - 
All of us are rulers of this nation!]


YaamaRindha mozhigaLilae (யாமறிந்த மொழிகளிலே)


யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்;
YaamaRindha mozhigaLilae thamizh mozhi pOl
           Inidhaavadhu engum kaaNOm;

[Among all the languages that I've known,
there's none as sweet as Tamil;]

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொல பான்மை கெட்டு,
நாமம் அது தமிழரென கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
Paamararaai, vilangugaLaai, ulaganaithum
           Igazhchi sola paanmai kettu,
Naamam adhu thamizharena koNdu ingu
          Vaazhndhidudhal NandrO? Solleer!

[After losing our traditional wealth, and being condemned
by the world as illiterates and animals,
Is it good to still retain our name as Tamilians?]

தேமதுர தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
Thaemadhura thamizhOsai ulagamelaam
          Paravum vagai seithal vaendum.

[We should spread the sound of Tamil,
which is as sweet as honey, to this entire earth]


யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல்,
பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
YaamaRindha pulavarilae Kambanai pOl,
          VaLLuvar pOl, ILangOvai pOl,
Boomi thanil yaangaNumae piRanthathillai,
          UNmai, veRum pugazhchi illai;

[Among all the poets that I've known,
there's none equivalent to Kambar, Valluvar or Elango,
This is the fact and not just a praise;]

ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொல் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர்!
Oomaiyaraai sevidargaLaai kurudargaLai
          VaazhgindrOm; oru sol kaeLeer!
SaemamuRa vaeNdumenil theruvellaam
          Thamizh muzhakkam sezhikka seiyveer!

[We're all living the lives of deaf, dumb and blind;
Listen to my words, our only way to prosperity
is by propagating the goodness of Tamil
on every roads and streets!]


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்;
PiRaNaattu NallaRignar saaththirangaL
          Thamizh mozhiyil peyarththal vaeNdum;
IRavaadha pugazhudaiya pudhu NoolgaL
          Thamizh mozhiyil iyatral vaeNdum;

[Works of famous scholars from abroad have to be translated to Tamil;
Unborrowed yet commendable books must be created in Tamil;]

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமை எனில் வெளி நாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.
MaRaivaaga NamakkuLLae pazhangathaigaL
          SolvathilOr magimai illai;
ThiRamaana pulamai enil veLi NaattOr
          Adhai vaNakkam seithal vaeNdum.

[There's no use in talking old stories amongst ourselves;
If we have a poetic talent, then it has to be respected
by us and the foreigners as well.]


உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்;
ULLaththil uNmai oLi uNdaayin
          Vaakkinilae oLi uNdaagum;

[When we plant the ray of truth in our heart,
it will reflect in our speech too;]

வெள்ளத்தின் பெருக்கை போல் கலை பெருக்கும்
கவி பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்று பதவி கொள்வார்;
VeLLaththin perukkai pOl kalai perukkum
          Kavi perukkum maevu maayin,
PaLLaththil veezhndhirukkum kurudarellaam
          Vizhi petru padhavi koLvaar;

[Like a flood's enormity, if we are able to create
an avalanche of artworks and poems,
Then the blind men who are living in depths of ignorance
will all get enlightened;]

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்பு கண்டார்.
TheLLutra thamizh amudhin suvai kaNdaar
          Ingu amarar siRappu kaNdaar.

[Those who have tasted the sweet nectar Tamil
have attained the esteem of Gods and Demigods on earth!]


Thursday, 4 April 2013

NiRpadhuvae, Nadappadhuvae.... (நிற்பதுவே, நடப்பதுவே...)


நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ? - பல தோற்ற மயக்கங்களோ?
NiRpadhuvae, Nadappadhuvae, paRappadhuvae, NeengaLellaam
SoRpanam dhaanO? - pala thOtra mayakkangaLO?

[Those that are standing around me, walking and flying,
Are you all just a dream? Or a delusion taking various forms?]

கற்பதுவே! கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
KaRpadhuvae! kaetpadhuvae, karudhuvadhae, NeengaLellaam
ARpa maayaigaLO? - ummuL aazhndha poruLillayO?

[All that I'm learning everyday, hearing and believing,
Are you all just petty illusions? Don't you have deeper meanings?]


வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? - வெறும் காட்சி பிழை தானோ?
Vaanagamae, iLaveyilae, maracheRivae NeengaLellaam
Kaanalin NeerO? - veRum kaatchi pizhai dhaanO?

[The vast sky, dawning sun and rich trees,
Are you all just a mirage? Or just a faulty vision?]

போனதெல்லாம் கனவினை போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? - இந்த ஞாலமும் பொய் தானோ?
POnadhellaam kanavinai pOl pudhaindhazhindhae pOnadhanaal
Naanum Or kanavO? - indha gnaalamum poi dhaanO?

[Since all that's gone has gone unnoticed like a dream,
Am I a dream too? Is this world a lie too?]


காலமென்றே ஒரு நினைவும் காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? - அங்கு குணங்களும் பொய்களோ?
Kaalamendrae oru Ninaivum kaatchi endrae pala Ninaivum
KOlamum poigaLo? - angu guNangaLum poigaLO?

[My memories of the past and several visions,
Their form and their traits are all untrue too?]

சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ? - இதை சொல்லொடு சேர்ப்பாரோ?
SOlaiyilae marangaLellaam thOndruvadhOr vidhaiyilendraal,
SOlai poiyyaamO? - idhai sollodu saerppaarO?

[If it's true that all the trees in the garden come from a seed,
Can I conclude that the garden is an illusion as well?]


காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே - நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
KaaNbavellaam maRaiyumendraal maRaindhadhellaam kaaNbamandrO?
VeeNpadu poiyyilae - Niththam vidhi thodarndhidumO?

[If all that I see could vanish and all that have vanished could be seen,
Will my fate continue forever in this path lead by untrue facts?]

காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை;
காண்பது சக்தியாம் - இந்த காட்சி நித்யமாம்.
KaaNbadhuvae uRudhi kaNdOm kaaNbadhallaal uRudhiyillai;
KaaNbadhu Sakthiyaam - indha kaatchi Nithiyamaam.

[My trust lies with what I see and I'm unsure about what I can't see;
And when I see Goddess Shakthi that vision will remain forever.]


Sendradhini meeLaadhu moodarae! (சென்றதினி மீளாது மூடரே!)


சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
Sendradhini meeLaadhu moodarae! Neer
          Eppodhum sendradhaiyae sindhai seidhu

[What has gone will never come back!
So don't always think about your past]

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனை குறித்தல் வேண்டாம்.
Kondrazhikkum kavalaiyenum kuzhiyil veezhndhu
          Kumaiyaadheer! Sendradhanai kuRithal vaendaam.

[And fall into the dark, killing pit of sorrow!
Never refer back to what is over.]

இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதை திண்ணமுற இசைத்து கொண்டு 
Indru pudhidhaai piRandhOm endru Neevir
         ENNamadhai thiNNamuRa isaithu koNdu

[Think that you've got a new life today
And keep that thought firm in your mind]

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்து போம், திரும்பி வாரா.
Thindru viLaiyaadi inbutrirundhu vaazhveer;
         Theemaiyelaam azhindhu pOm, thirumbi vaaraa.

[So, eat, play and lead a joyous life;
All your misfortunes will get destroyed, And will never return.]


Manathil uRuthi vaeNdum (மனதில் உறுதி வேண்டும்)

மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
Manathil uRuthi vaeNdum,
Vaakkinilae inimai vaeNdum;

[I want a firm heart,
I want my speech to be sweet;]

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
Ninaivu Nalladhu vaeNdum,
Nerungina poruL kaippada vaeNdum;

[I want only good thoughts,
And the thoughts that are close enough, should reach my hands;]

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
Kanavu meiyppada vaeNdum,
Kaivasamaavadhu viraivil vaeNdum;

[I want all my dreams to come true,
And I want to make them mine soon;]

தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
Thanamum inbamum vaeNdum,
TharaNiyilae perumai vaeNdum.

[I want prosperity and happiness,
And I want to live on earth with pride.]


கண் திறந்திட வேண்டும்,
காரியத்தில் உறுதி வேண்டும்;
KaN thiRandhida vaeNdum,
Kaariyathil uRuthi vaeNdum;

[Let our eyes open up,
And do our duties with determination;]

பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
PeN viduthalai vaeNdum,
Periya kadavuL kaakka vaeNdum;

[Let the women attain freedom,
And be protected by the most powerful deity;]

மண் பயனுற வேண்டும்,
வானகம் இங்கு தென்பட வேண்டும்,
MaN payanuRa vaeNdum,
Vaanagam ingu thenpada vaeNdum,

[Let our land become useful,
And the sky be visible to our eyes,]

உண்மை நின்றிட வேண்டும்,
UNmai Nindrida vaeNdum,

[Let truth lay it's stronghold.]

ஓம் ஓம் ஓம் ஓம்.
Om Om Om Om.

Agni Kunju! ( அக்னி குஞ்சு )



அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

Agni kunjondru kaNdaen - adhai
       Angoru kaattilOr pondhidai vaithaen;
Vendhu thaNindhadhu kaadu; - thazhal
       Veerathil kunjendrum mooppendrum uNdO?
Thatharigida thatharigida thithom.


[I found a small spark of fire - and
Placed it inside a burrow in a forest;
The entire forest was burnt down to ashes;
Would you judge an ember's prowess by it's might?]




Saturday, 30 March 2013

Maayaiyai Pazhithal! ( மாயையை பழித்தல்!)

This poem has been addressed to Maya - the Goddess of Illusions.


உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ?
மாயையே - மன 
திண்மை உள்ளாரை நீ செய்வதும் 
ஒன்றுண்டோ! - மாயையே!
UNmai aRindhavar unnai kaNippaaro?
Maayaiye - Mana
ThiNmai uLLaarai Nee seivadhum
OndruNdO! - Maayaiye!

[Will you (Maya) be appraised by men who are aware of the eternal truth?
What can be done by you to those who have the internal strength?]

எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும்
மாயையே - நீ
சித்ததெளிவு எனும் தீயின் முன்
நிற்பாயோ! - மாயையே!
Ethanai kOdi padai koNdu vandhaalum
Maayaiye - Nee
SithatheLivu enum theeyin mun
NiRpaayO! - Maayaiye!

[Even when you're able to gather countless troops on your side - 
You don't stand a chance against the fierce and clear mind!]

என்னை கெடுப்பதற்கு எண்ணம் உற்றாய்
கெட்ட மாயையே! - நான்
உன்னை கெடுப்பது உறுதி என்றே
உணர் - மாயையே!
Ennai keduppadhaRku eNNam utraai
Ketta Maayaiye! - Naan
Unnai keduppadhu uRudhi endrae
UNar - Maayaiye!

[You willed on ruining me, evil Maya!
Realize that I'm firm on destructing you!]

சாக துணியிற் சமுத்திரம் எம்மட்டு
மாயையே - இந்த
தேகம் பொய்யென்று உணர் தீரரை என்
செய்வாய்? - மாயையே!
Saaga thuNiyiR samuthiram emmattu
Maayaiye - Indha
Dhaegam poiyendru uNar Dheerarai en
Seivaai? - Maayaiye!

[An ocean's depth isn't scary when the person is ready to die?
What can you do to the brave heart that has realized the falsehood of this body?!]

இருமை அழிந்த பின் எங்கிருப்பாய், அற்ப
மாயையே! - தெளிந்த
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ? - மாயையே!
Irumai azhindha pin engiruppaai, aRpa
Maayaiye! - TheLindhu
Orumai kaNdaar munnam Odaadhu
NiRpaiyo? - Maayaiye!

[Where will you go insignificant Maya, when the enclosing darkness has shifted?
Can you stand boldly in front of people who are clear and united?]

நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே - சிங்கம்
நாய் தர கொள்ளுமோ - நல்ல
அரசாட்சியை - மாயையே!
Nee tharum inbathai Naerendru koLvano
Maayaiye - Singam
Naai thara koLLumo - Nalla
Arasaatchiyai - Maayaiye!

[Will I regard the delight given by you to be fair - 
Will the lion receive kingship when it's offered by a dog!]

என்னிச்சை கொண்டு உனை எற்றி விட
வல்லேன் மாயையே! - இனி
உன் இச்சை கொண்டு எனக்கொன்றும்
வராது காண் - மாயையே!
Ennichai koNdu unai etri vida
Vallaen Maayaiye! - Ini
Un ichai koNdu enakkondrum
varaadhu kaaN - Maayaiye!

[I'm capable of kicking you off  with my desire, Maya!
From now on, your wishes won't yield me anything - Maya!]

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே! - உந்தன்
போர்க்கு அஞ்சுவேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே!
Yaarkkum kudiyallaen yaanenba
ThOrndhanan Maayaiye! - Undhan
POrkku anjuvaenO  podiyaakkuvaen
Unnai - Maayaiye!

[I have understood that I must not be a shelter for anybody!
Will I be scared to combat you, I'll instead shred your body!]

ENNiya mudidhal vaeNdum (எண்ணிய முடிதல் வேண்டும்)


எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்;
ENNiya mudidhal vaeNdum, Nallave eNNal vaeNdum;

[Let all thoughts be accomplished, And only goodness be thought of;]

திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும்;
ThiNNiya Nenjam vaeNdum, TheLindha NallaRivu vaeNdum;

[Let my heart be strong, And my mind be clear;]

பண்ணிய பாவம் எல்லாம், பரிதி முன் பனியே போல,
PaNNiya paavam ellaam, Paridhi mun paniye pola,

[Let all sins that I've committed, Become like snow before sun,]

நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!
NaNNiya Nin mun ingu Nasithidal vaeNdum Annaai!

[And before your righteous form, Get crushed Oh Mother!]


Nalladhor VeeNai Seithe (நல்லதோர் வீணை செய்தே)


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?
NalladhOr veeNai seithae - adhai
Nalam keda puzhudhiyil eRivadhundO?

[Will you create a wonderful Veena (Indian Lute) and mess it up by throwing it to rubbish?]

சொல்லடி, சிவசக்தி, எனை
சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
Solladi, SivaSakthi, enai
sudar migum aRivudan padaithuvittaai.

[Speak up, Goddess Shakthi, why have you given me such sparkling intelligence?]

வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
Vallamai thaaraayo - indha
maaNilam payanuRa vaazhvadhaRkae?

[Won't you give me the strength to live as a contributor to my Mother-land?]

சொல்லடி, சிவசக்தி! - நில
சுமையென வாழ்ந்திட புரிகுவையோ?
Solladi, SivaSakthi! - Nila
sumaiyena vaazhndhida puriguvaiyO?

[Speak up, Goddess Shakthi, why have you made me a living burden to my land?]


விசையறு பந்தினை போல் - உள்ளம்
வேண்டிய படி செலும் உடல் கேட்டேன்;
VisaiyuRu pandhinai pOl - uLLam
veNdiya padi selum udal kettaen;

[Like a ball attracted by gravity - I want a body that could go in the direction my heart says;]

நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்;
NasaiyaRu manam kettaen - Nitham
Navamena sudar tharum uyir kettaen;

[I want a heart without desires - And a spirit that provides me vital sparks everyday;]

தசையினை தீ சுடினும் - சிவ
சக்தியை பாடும் நல் அகம் கேட்டேன்;
Thasaiyinai thee sudinum - Siva
Sakthiyai paadum Nal agam kettaen;

[Even when my body is burnt - I want a heart that prays to God Siva and Goddess Shakthi;]

அசைவறு மதி கேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
AsaivaRu madhi kettaen; Ivai
aruLvadhil unakkedhum thadaiyuLadho?

[I want an intellect devoid of confusions; What is preventing you from granting me my wishes?]

Sunday, 10 March 2013

Senthamizh Naadu! (செந்தமிழ் நாடு!)


செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்ப
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே.
Senthamizh Naadenum podhinilae - inba
            thaen vandhu paayudhu kaadhinilae - engaL
thandhaiyar Naadendra paechinilae oru
            sakthi pirakkudhu moochinilae.

[The sound of the name "Prosperous Tamil Nadu" is as sweet as honey to my ears;
And when I talk about my ancestral-land, I feel a new strength in each breath!]

வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு.
Vedham NiRaindha thamizh Naadu - uyar
            veeram seRindha thamizh Naadu - nalla
kaadhal puriyum arambaiyar pol - iLam
            kanniyar soozhndha thamizh Naadu.

[This land is loaded with scriptures and crowded with courage;
And surrounded by young ladies akin to heavenly damsels!]

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய ஆறு பல ஓட - திரு
மேனி செழித்த தமிழ் நாடு.
Kaaviri thenpeNNai paalaaRu - thamizh
            kaNdadhOr vaiyai porunai Nadhi - ena
maeviya aaRu pala Oda - thiru
            maeni sezhitha thamizh Naadu.

[Kaveri, Thenpennai, Palar, Vaigai and Porunai - 
Are the rivers that flourish the stretch of Tamil Nadu!]

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புற காக்கும் தமிழ் நாடு - செல்வம்
எத்தனை உண்டு புவி மீதே - அவை
யாவும் படைத்த தமிழ் நாடு.
Muthamizh maamuni neeLvaraiye - Nindru
            moiymbuRa kaakkum thamizh Naadu - selvam
ethanai undu puvi meedhae - avai
            yaavum padaitha thamizh Naadu.

[Whatever riches can be found in this world
They are all present in Tamil Nadu!]

நீல திரைகடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம்செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டி கிடக்கும் தமிழ் நாடு.
Neela thiraikadal orathilae - Nindru
            Nitham thavamsei kumari ellai - vada
maalavan kundram ivatridaiyae - pugazh
            maNdi kidakkum thamizh Naadu.

[Near the Southern blue seas, Goddess KanyaKumari stands perpetually for her devout prayers;
And Lord Vishnu's hill(Tirumala) in the North - In between lies the glorious Tamil Nadu!]

கல்வி சிறந்த தமிழ் நாடு - புகழ்
கம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல
பலவிதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசும் தமிழ் நாடு.
Kalvi siRandha thamizh Naadu - pugazh
            kamban piRandha thamizh Naadu - Nalla
palavidhamaayina saathirathin - maNam
            paarengum veesum thamizh Naadu.

[In Tamil Nadu, education has excelled and the famous poet Kambar was born;
Philosophies have enhanced - And their fragrance flows to the entire earth!]

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ் நாடு.
VaLLuvan thannai ulaginukkae - thandhu
            vaanpugazh koNda thamizh Naadu - Nenjai
aLLum silappadhigaaram endrOr - maNi
            yaaram padaitha thamizh Naadu.

[By giving poet Valluvar to this world, Tamil Nadu's glory has reached sky high!
A treat to the reader's heart, Silappadhigaaram, is also a work from Tamil Nadu.]

Theeraadha viLaiyaattu piLLai (தீராத விளையாட்டு பிள்ளை)


தீராத விளையாட்டு பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை.
Theeraadha viLaiyaattu piLLai - KaNNan
theruvilae peNgaLukkOyaadha thollai.

[Little Krishna is an ever mischievous kid - 
For the women in his street, He's an unstoppable trouble]


தின்ன பழம் கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான்;
என்னப்பன் என்னைய்யன் என்றால் அதனை
எச்சிற் படுத்தி கடித்து கொடுப்பான்.
Thinna pazham kondu tharuvaan; - paadhi
        thingindra podhilae thatti paRippaan;
Ennappan ennaiyyan endraal adhanai
        echiR paduthi kadithu koduppaan.

[He'll bring sweet fruits for me - But He'll snatch it from me while I'm eating it;
And when I beg him, He'll take a bite of the fruit and return it to me.]

தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.
Thaenotha paNdangaL koNdu - enna
         seidhaalum ettaadha uyarathil vaippaan;
maanotha peNNadi enbaan - satru
         manamagizhum Nerathilae kiLLi viduvaan.

[He'll brings sweets that taste like honey and place them at a height where I can't reach;
He'll say that I'm elegant as a deer - But before I could feel happy for that, He'll pinch me out of it!]

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழ செய்து பின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னை
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்.
AzhaguLLa malar koNdu vandhae - ennai
         azha azha seidhu pin, "kaNNai moodikkoL;
kuzhalilae soottuvaen" enbaan - ennai
         kurudaakki malarinai thozhikku vaippaan.

[He'll bring a beautiful flower and make me cry for it - Then He'll say "Close your eyes;
I'll wear it on your hair" - And when I'm blinded He'll wear it to my friend's hair.]

பின்னலை பின்னின்றிழுப்பான்; - தலை
பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான்;
வண்ண புது சேலை தனிலே - புழுதி
வாரிசொரிந்தே வருத்தி குலைப்பான்.
Pinnalai pinnindrizhuppaan; - thalai
         pinnae thirumbum munnae sendru maRaivaan;
vaNNa pudhu saelai thanilae - puzhudhi
         vaarichorindhae varuthi kulaippaan.

[He'll pull my braided hair from behind - Before I could turn my head, He'll walk ahead and disappear;
On my colorful new sari, He'll splash mud and dirt and humiliate me.]

புல்லாங்குழல் கொண்டு வருவான்; - அமுது
பொங்கி ததும்பும் நற்கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதை
கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்.
Pullaanguzhal koNdu varuvaan; - amudhu
         pongi thadhumbum naRgeedham padippaan;
kaLLaal mayanguvadhu pOlae - adhai
         kaNmoodi vaai thirandhae kaettiruppOm.

[He'll bring a flute and play a sweet and mesmerizing melody;
As if we are drunk, we'll listen to his music, with closed eyes and open mouth!]

அங்காந்திருக்கும் வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பை போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்ததுண்டோ? - கண்ணன்
எங்களை செய்கின்ற வேடிக்கை ஒன்றோ?
Angaandhirukkum vaai thanilae - KaNNan
         aaRaezhu katteRumbai pOttu viduvaan;
engaagilum paarthadhundo? - KaNNan
         engaLai seigindra vaedikkai ondro?

[Into our open mouths, Little Krishna will put six or seven big ants;
Have you seen anywhere? At least one such mischief and fun that He's making on us?]

விளையாட வாவென்றழைப்பான்; - வீட்டில்
வேலை என்றாலதை கேளாதிழுப்பான்;
இளையாரோடாடி குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்து போய் வீட்டிலே சொல்வான்.
viLaiyaada vaavendrazhaippaan; - veettil
         vaelai endraaladhai kaeLaadhizhuppaan;
iLaiyaarodaadi kudhippaan; - emmai
         idaiyiR pirindhu poi veettilae solvaan.

[He'll ask me to play with him - And pull me without listening to my excuse of household chores;
While I'm playing with Him and His friends, He'll sneak out and complain about me in my house]

அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கும் அஃதே.
எம்மை துயர் செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்.
Ammaikku nallavan kaNdeer! - mooLi
         athaikku nallavan, thandhaikkum akdhae.
emmai thuyar seyyum periyOr - veettil
         yaavarkkum nallavan pOle Nadappaan.

[You can see Him being obedient to His mother, father and widowed aunt as well.
He behaves good to everyone in the house and even to the elders who distress me.]

கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொல்ல கூசா சழக்கன்;
ஆளுக்கிசைந்தபடி பேசி - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்.
KOLukku migavum samarthan; - poimmai
         soothiram pazhisolla koosaa sazhakkan;
aaLukkisaindhapadi paesi - theruvil
         athanai peNgaLaiyum aagaadhadippaan.

[He's very smart in backbiting; And He isn't ashamed to lie, trick or accuse others;
He'll talk to each person, knowing their interest, and create enmity between every woman in the street.]


Achamillai achamillai achchamenbadhillaiye!(அச்சமில்லை அச்சமில்லை)


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye
[I will not fear!]

இச்சகத்துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்,
IchagathuLLorellaam edhirthu Nindra podhinum,
[When every human on this earth stands up against me]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye


துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதினும்,
Thuchamaaga eNNi Nammai thooRu seidha podhinum,
[ When I'm thought of as useless and thrown into garbage]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
Pichai vaangi uNNum vaazhkai petru vitta podhinum
[ When I'd have to beg for my everyday bread]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye


இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
Ichai konda poruLelaam izhandhuvitta podhinum
[ When I've lost everything that I desired]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
KachaNindha kongai maadhar kaNgaL veesu podhinum,
[When sensual women flash their eyes on me]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye


நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதினும்,
Nachai vaayile koNarndhu NaNbar oottum podhinum,
[ When I'm fed with poison by my only friend]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye,

பச்சை ஊனியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
Pachai ooniyaindha veR padaigaL vandha podhinum,
[ When a swarm of armed forces come after me]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye,


உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதினும்
Uchimeedhu vaan idindhu veezhugindra podhinum
[ When the sky above cracks and showers down on my head]
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
Achamillai achamillai achchamenbadhillaiye.
[I will not fear!]


Saturday, 2 March 2013

Kannan en Kaadhalan ( கண்ணன் என் காதலன் )



தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே சுடர் விளக்கினைப்போல்,
நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!
thoondiR puzhuvinaippol - veLiyae sudar viLakkinaippol,
NeeNda pozhudhaaga - enadhu Nenjam thudithadhadee!

[Like the worm on a fishing hook - like a lamp that's placed outside,
 My heart throbbed during those long day hours!]

கூண்டு கிளியினைப்போல் - தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளையெல்லாம் - மனது வெறுத்து விட்டதடீ!
KooNdu kiLiyinaippol - thanimai koNdu migavum Nondhen;
vaeNdum poruLaiyellaam - manadhu veRuthu vittadhadee!

[I felt lonely as a caged parrot
 And hated everything that I wanted!]

பாயின் மிசை நானும் - தனியே படுத்திருக்கையிலே,
தாயினை கண்டாலும் - சகியே! சலிப்பு வந்ததடீ!
paayin misai Naanum - thaniyae paduthirukkaiyilae,
thaayinai kaNdaalum - sagiyae! salippu vandhadhadee!

[Lying alone on a mat - Oh friend,
 I felt bored by the sight of even my mother's face!]

வாயினில் வந்ததெல்லாம் - சகியே! வளர்த்து பேசிடுவீர்,
நோயினை போலஞ்சினேன்; - சகியே! நுங்களுறவையெல்லாம்.
vaayinil vandhadhellaam - sagiyae! vaLarthu paesiduveer,
Noyinai polanjinaen; - sagiyae! NungaLuRavaiyellaam.

[Friends, you will talk as you please about me
 So, I despised you all like a disease]

உணவு செல்லவில்லை; - சகியே! உறக்கம் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; சகியே! மலர் பிடிக்கவில்லை;
uNavu sellavillai; - sagiyae! uRakkam koLLavillai.
maNam virumbavillai; sagiyae! malar pidikkavillai;

[I was unable to eat and sleep,
 And flowers didn't smell sweet to me.]

குணம் உறுதியில்லை; - எதிலும் குழப்பம் வந்ததடீ!
கணமும் உள்ளத்திலே - சுகமே காண கிடைத்தில்லை.
guNam uRudhiyillai; - edhilum kuzhappam vandhadhadee!
gaNamum uLLathilae - sugamae kaaNa kidaithadhillai.

[As I lacked a strong personality, I was always confused!
 And I wasn't happy inside for a single second.]

பாலும் கசந்ததடீ! - சகியே படுக்கை நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும் - செவியில் குத்தல் எடுத்ததடீ!
paalum kasandhadhadee! - sagiyae padukkai Nondhadhadee!
kOlakkiLi mozhiyum - seviyil kuthal eduthadhadee!

[Milk tasted bitter to me - my bed didn't comfort me!
 Even the sweet chirping of birds sounded annoying to my ears!]

நாலு வயித்தியரும் - இனிமேல் நம்புதற்கில்லை என்றார்;
பாலத்து சோசியனும் - கிரகம் படுத்துமென்று விட்டான்.
Naalu vayithiyarum - inimael NambuthaRkillai endraar;
paalathu chosiyanum - kiragam paduthumendru vittaan.

[Various doctors gave up, saying that I may not be normal again;
 And the astrologer said that my stars are affecting me.]

கனவு கண்டதிலே - ஒருநாள் கண்ணுக்கு தோன்றாமல்
இனம் விளங்கவில்லை - எவனோ என்னகம் தொட்டுவிட்டான்.
kanavu kaNdadhilae - oruNaaLL kaNNukku thondraamal
inam viLangavillai - evano ennagam thottuvittaan.

[And then one night I dreamt
  Of an unknown someone who touched my heart.]




வினவ கண் விழித்தேன்; - சகியே! மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ!
vinava kaN vizhithaen; - sagiyae! maeni maRaindhu vittaan;
manadhil mattilumae - pudhidhOr magizhchi kaNdadhadee!

[As I opened my eyes to enquire about him, his form vanished;
 But only inside my heart - I felt a refreshing happiness!]

உச்சி குளிர்ந்ததடீ! சகியே! உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடும் எல்லாம் - முன்னைப்போல் மனதுக்கு ஒத்ததடீ!
uchi kuLirndhadhadee! sagiyae! udambu naeraachu,
machilum veedum ellaam - munnaippol manadhukku othadhadee!

[I felt fit and peaceful from my head to toe,
 My house and all of it's surroundings seemed close to heart, as before!]

இச்சை பிறந்ததடீ! - எதிலும் இன்பம் விளைந்ததடீ!
அச்சம் ஒழிந்ததடீ! - சகியே! அழகு வந்ததடீ!
ichai piRandhadee! - edhilum inbam viLaindhadhadee!
acham ozhindhadhadee! - sagiyae! azhagu vandhadhadee!

[I developed a desire and liking in everything that I saw!
 All my fear disappeared and I started feeling more beautiful!]

எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன் கை இட்ட இடத்தினிலே
தண்ணென்றிருந்ததடீ! - புதிதோர் சாந்தி பிறந்ததடீ!
eNNum pozhudhilellaam - avan kai itta idathinilae
thaNNendrirundhadhadee! - pudhidhOr saanthi pirandhadhadee!

[Whenever I think of where his hand touched me
 I feel a coolness on my body! - and inside my mind!]

எண்ணி எண்ணி பார்த்தேன்; - அவன் தான் யாரென சிந்தை செய்தேன்;
கண்ணன் திரு உருவம் - அங்ஙனே கண்ணின் முன் நின்றதடீ!
eNNi eNNi paarthaen; - avan dhaan yaarena sindhai seidhaen;
kaNNan thiru uruvam - angnanae kaNNin mun Nindradhadee!

[I thought over and over again - about the one in my dreams;
 And now I know who he is - as I see Kannan's form before my eyes!]