Sunday, 10 March 2013

Theeraadha viLaiyaattu piLLai (தீராத விளையாட்டு பிள்ளை)


தீராத விளையாட்டு பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை.
Theeraadha viLaiyaattu piLLai - KaNNan
theruvilae peNgaLukkOyaadha thollai.

[Little Krishna is an ever mischievous kid - 
For the women in his street, He's an unstoppable trouble]


தின்ன பழம் கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான்;
என்னப்பன் என்னைய்யன் என்றால் அதனை
எச்சிற் படுத்தி கடித்து கொடுப்பான்.
Thinna pazham kondu tharuvaan; - paadhi
        thingindra podhilae thatti paRippaan;
Ennappan ennaiyyan endraal adhanai
        echiR paduthi kadithu koduppaan.

[He'll bring sweet fruits for me - But He'll snatch it from me while I'm eating it;
And when I beg him, He'll take a bite of the fruit and return it to me.]

தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.
Thaenotha paNdangaL koNdu - enna
         seidhaalum ettaadha uyarathil vaippaan;
maanotha peNNadi enbaan - satru
         manamagizhum Nerathilae kiLLi viduvaan.

[He'll brings sweets that taste like honey and place them at a height where I can't reach;
He'll say that I'm elegant as a deer - But before I could feel happy for that, He'll pinch me out of it!]

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழ செய்து பின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னை
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்.
AzhaguLLa malar koNdu vandhae - ennai
         azha azha seidhu pin, "kaNNai moodikkoL;
kuzhalilae soottuvaen" enbaan - ennai
         kurudaakki malarinai thozhikku vaippaan.

[He'll bring a beautiful flower and make me cry for it - Then He'll say "Close your eyes;
I'll wear it on your hair" - And when I'm blinded He'll wear it to my friend's hair.]

பின்னலை பின்னின்றிழுப்பான்; - தலை
பின்னே திரும்பும் முன்னே சென்று மறைவான்;
வண்ண புது சேலை தனிலே - புழுதி
வாரிசொரிந்தே வருத்தி குலைப்பான்.
Pinnalai pinnindrizhuppaan; - thalai
         pinnae thirumbum munnae sendru maRaivaan;
vaNNa pudhu saelai thanilae - puzhudhi
         vaarichorindhae varuthi kulaippaan.

[He'll pull my braided hair from behind - Before I could turn my head, He'll walk ahead and disappear;
On my colorful new sari, He'll splash mud and dirt and humiliate me.]

புல்லாங்குழல் கொண்டு வருவான்; - அமுது
பொங்கி ததும்பும் நற்கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதை
கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்.
Pullaanguzhal koNdu varuvaan; - amudhu
         pongi thadhumbum naRgeedham padippaan;
kaLLaal mayanguvadhu pOlae - adhai
         kaNmoodi vaai thirandhae kaettiruppOm.

[He'll bring a flute and play a sweet and mesmerizing melody;
As if we are drunk, we'll listen to his music, with closed eyes and open mouth!]

அங்காந்திருக்கும் வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பை போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்ததுண்டோ? - கண்ணன்
எங்களை செய்கின்ற வேடிக்கை ஒன்றோ?
Angaandhirukkum vaai thanilae - KaNNan
         aaRaezhu katteRumbai pOttu viduvaan;
engaagilum paarthadhundo? - KaNNan
         engaLai seigindra vaedikkai ondro?

[Into our open mouths, Little Krishna will put six or seven big ants;
Have you seen anywhere? At least one such mischief and fun that He's making on us?]

விளையாட வாவென்றழைப்பான்; - வீட்டில்
வேலை என்றாலதை கேளாதிழுப்பான்;
இளையாரோடாடி குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்து போய் வீட்டிலே சொல்வான்.
viLaiyaada vaavendrazhaippaan; - veettil
         vaelai endraaladhai kaeLaadhizhuppaan;
iLaiyaarodaadi kudhippaan; - emmai
         idaiyiR pirindhu poi veettilae solvaan.

[He'll ask me to play with him - And pull me without listening to my excuse of household chores;
While I'm playing with Him and His friends, He'll sneak out and complain about me in my house]

அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கும் அஃதே.
எம்மை துயர் செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்.
Ammaikku nallavan kaNdeer! - mooLi
         athaikku nallavan, thandhaikkum akdhae.
emmai thuyar seyyum periyOr - veettil
         yaavarkkum nallavan pOle Nadappaan.

[You can see Him being obedient to His mother, father and widowed aunt as well.
He behaves good to everyone in the house and even to the elders who distress me.]

கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொல்ல கூசா சழக்கன்;
ஆளுக்கிசைந்தபடி பேசி - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்.
KOLukku migavum samarthan; - poimmai
         soothiram pazhisolla koosaa sazhakkan;
aaLukkisaindhapadi paesi - theruvil
         athanai peNgaLaiyum aagaadhadippaan.

[He's very smart in backbiting; And He isn't ashamed to lie, trick or accuse others;
He'll talk to each person, knowing their interest, and create enmity between every woman in the street.]


No comments:

Post a Comment